×

கொள்ளிடம் அருகே பரபரப்பு பஸ் இயக்கப்படாததை கண்டித்து சாலை மறியல் மாணவர்கள், பொதுமக்கள் திரண்டனர்

கொள்ளிடம், மார்ச் 3: கொள்ளிடம் அருகே பஸ் இயக்கப்படாததை கண்டித்து மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் சீர்காழியிலிருந்து உமையாள்பதி, மாதானம், ஆளாளசுந்தரம், ஆச்சாள்புரம், கொள்ளிடம் வழியாக சிதம்பரத்துக்கு கடந்த 2 வருடத்திற்கு முன் 5 முறை அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. அதன் பின் இந்த வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் 2 முறையாக குறைக்கப்பட்டது. இது குறித்து இப்பகுதி மக்களின் சார்பாக கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டன. அந்த கோரிக்கையை ஏற்று கடந்த 27.8.19 அன்று சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் ஒரு நாளைக்கு மீண்டும் 5 முறை இதே வழித்தடங்களில் பஸ் இயக்க சீர்காழி அரசு போக்குவரத்து கழக மேலாளர் மற்றும் தாசில்தார் உறுதி அளி்த்தனர்.

ஆனால் இதுவரை 5 முறை பஸ் இயக்கப்படவில்லை. இதுகுறித்து மீண்டும் கோரிக்கைகள் அளித்தும் பலன் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், மாணவ, மாணவியர் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் வட்டக்குழு விஜய் தலைமையில் நேற்று காலை கூட்டுமாங்குடி முருகன் கோயில் எதிரில் அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கொள்ளிடம் போலீசார் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Road picket students ,civilians ,hut ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை