×

அண்ணாமலை பல்கலையில் கருப்பொருள்கள் குறித்த நிகழ்வு

சிதம்பரம், மார்ச் 3: உள் தர உத்தரவாத அமைப்பின் சார்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் அளித்த நிதியுதவியுடன் மதிப்புமிக்க அறிவார்ந்த கருப்பொருள்கள் குறித்த 5 நாள் நிகழ்வு அண்ணாமலைப் பல்கலைக்கழக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் தொடங்கியது. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பான கடைசி ஐந்து வருட நோபல் பரிசுக்கு இணையான உலகளாவிய பரிசுகளைப் பற்றி எடுத்துரைத்து மாணவர்களை ஊக்குவித்தது. இணைப் பேராசிரியரும் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கோவிந்தராஜன் வரவேற்றார். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவரும் நிகழ்வின் அமைப்பாளருமான பேராசிரியர் முனைவர் அருணா தலைமை உரையாற்றினார்.

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புல முதல்வர் முனைவர் ரகுகாந்தன் தொடக்க உரையை நிகழ்த்தினார். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் முனைவர் சந்திரசேகரன் டிஜிட்டல் கையொப்பம் குறித்து கலந்துரையாடலுடன் சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்தினார். கணினி கட்டமைப்பு, நவீன தரவு தள அமைப்புகள், உலகளாவிய வலை மற்றும் ஆழமான கற்றல் போன்ற நோபல் பரிசுக்கு இணையான பரிசுகளை பற்றிய கருப்பொருள்கள் குறித்து சிறப்பு சொற்பொழிவுகள் நிபுணர்களால் வழங்கப்பட்டது. சொற்பொழிவுகள், தொழில்நுட்ப இணைப்பு மற்றும் தொழில்நுட்ப வினாடி வினாக்கள் போன்ற போட்டிகள் மாணவர்களுக்காக நிகழ்த்தப்பட்டன. இந்த நிகழ்வில் பெருமளவில் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.

Tags : Event ,Annamalai University ,
× RELATED எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க...