×

விபத்தில் இறந்த மாணவனின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

ஜெயங்கொண்டம், மார்ச் 3: விபத்தில் உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கததால் கோர்ட் உத்தரவின்படி ஜெயங்கொண்டத்தில் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்த தங்கதுரை மகன் எழிலரசன் (16). இவர் பிளஸ்2 படித்து வந்த நிலையில் 2016 டிசம்பர் மாதம் ஜெயங்கொண்டம் காமராஜர் சிலை அருகே விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை, ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு ரூ.9,37,200 இழப்பீடு தர விழுப்புரம் கோட்டத்துக்கு கடந்தாண்டு மார்ச் மாதம் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் இழப்பீடு தராததால் எழிலரசனின் குடும்பத்தார், கோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்தனர். இதை விசாரித்து ரூ.11,39,086 இழப்பீட்டு தொகையாக விழுப்புரம் கோட்ட நிர்வாகம் தர வேண்டும் என்றும், விழுப்புரம் கோட்டத்துக்கு உரிய ஒரு பேருந்தை ஜப்தி செய்யவும் நீதிபதி நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நின்ற விழுப்புரம் கோட்ட அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் நிறுத்தினர்.

Tags : student ,
× RELATED பைக் மோதி உயிரிழந்த ரயில்வே பணிமனை...