×

ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த குழந்ைதகளை மீட்க 2 கருவிகள் கண்டுபிடிப்பு காப்புரிமை பெற்று தர கலெக்டரிடம் எலக்ட்ரீசியன் கோரிக்கை

பெரம்பலூர்,மார்ச் 3: மூடப்படாத ஆழ்குழாய்க் கிணறுக ளில் தவறிவிழுந்தக் குழந் தைகளை மீட்பதற்கு 2 கரு விகளைக் கண்டுபிடித்துள்ளேன்.காப்புரிமை பெற்றுத் தாருங்கள் என பெரம்பலூர் கலெக்டரிடம் ஐடிஐ முடித்த எலக்ட்ரீஷியன் கோரிக்கை விடுத்துள்ளார். பெரம்பலூர் கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் கூட்ட அரங்கத்தில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற் றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில்ஆலத்தூர் தாலுகா, கீழமாத்தூர், வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வெங்கடாசலம் (56) என்பவர் அளித்தக் கோரிக்கை மனுவில் தெரி வித்திருப்பதாவது :நான் தற்போது ஆலத்தூர் தாலுகா, கீழமாத்தூர் கிராமத்தில் தங்கி இருக்கிறேன். ஐடிஐ படித்துள்ள நான் எலக்ட்ரீஷியனாக வேலைபார்த்து வருகி றேன்.

நான் கடந்த அக்டோபர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம், நடுக்காட்டுப் பட் டியில் 2வயது சிறுவன் சுஜித் வில்சன் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 5 நாள் போராடி உயிரோடு மீட்க முடியாமல் இறந்துபோனதைத் தொடர் ந்து, பொதுஇடங்களில் பயன்பாடற்ற நிலையில், மூடப்படாமல் திறந்து கிடக் கும் ஆழ்துளைக் கிணற் றில் தவறி விழுந்த குழந் தையை மீட்கக் கூடிய 2 நவீன கருவிகளை எனது சொந்த முயற்சியில் தயாரித்துள்ளேன். இந்தக் கருவிகளுக்குக் காப்புரிமை பெறுவதற்கு ஒரு மாதமாக முயற்சிசெய்துவருகிறேன். ஆனால் எனக்கு எந்த வழியும் கிடைக்கவில்லை. ஆ.கவே தாங்களோ அல்லது தங்கள் சார்பாக வேறு ஒருவரோ இரண்டுகருவிகளையும் ஆய்வுசெய்துவிட்டு, அ தற்குக் காப்புரிமை பெறுவ தற்கான வழிமுறைகளை வழங்குமாறு கேட் டுக்கொ ள்கிறேன் என அந்தக் கோ ரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...