×

விவசாயிகள் அச்சம் மந்தகதியில் அன்னவாசலில் பாலப்பணி

புதுக்கோட்டை, மார்ச் 3: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள்மற்றும் வாகன ஒட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை சாலையில் உள்ளது அன்னவாசல். இதனை சுற்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களான சித்தன்னவாசல், மற்றும் குடுமியான்மலை, நார்த்தாமலை உள்ளது. இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் அன்னவாசல் வந்து செல்ல வேண்டும். இங்கு காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், மின்சார வாரிய அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன. நாளுக்குநாள் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலை வசதிகள் மிக குறுகியதாக இருந்தது. சாலைகளும் மிகவும் மோசமாக இருந்தது. சித்தன்னவாசலில் இருந்து பள்ளிவாசல் பேருந்து நிறுத்தம் வரை ஒரு பகுதியை தவிர புதிய சாலை அமைக்கும் பணிகள் முடிந்தது. இதனால் வாகனங்கள் சேதமின்றி வாகன ஓட்டிகள் இயக்கி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் இருந்து பேருந்து நிலையம் வரை ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று முடிந்த நிலையில் தற்சமயம் புதிய பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அன்னவாசல் அரசு மருத்துவமனை அருகே புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கி பல மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணிகள் முடியவில்லை. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர் எனவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கையிட்டுள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: அன்னவாசல் மருத்துவமனை எதிரே பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி பல நாட்கள் ஆகியும் பணிகள் இன்னும் முடிக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தூசிகள், மண் துகள்கள் பரப்பதால் அந்த பகுதியில் செல்லும் போது எந்நேரமும் புழுதி புயல் ஏற்பட்டது போல் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த இடம் வரும்போது வாயை கைகளால் பொத்திக்கொண்டு கடக்கின்றனர். இதனால் சில நேரங்கள் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர்.  இதனை தவிர்க்க வாகன ஓட்டிகளின் வசதிக்காக பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர். மந்தகதியில் அன்னவாசல் பாலப்பணி நடைபெறுவதால் வாகனஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் அவதி
விவசாய நிலங்களுக்குள் மின் கம்பிகள் தாழ்வாக தொங்குவது அரிமளம் பகுதியில் மட்டும் உள்ள பிரச்னை இல்லை. இது போன்று மாவட்டம் முழுவதும் உள்ள விவசாய நிலங்களில் நிலவுகிறது. இதற்கு காரணம் 3 மின்கம்பங்கள் நட வேண்டிய இடத்தில் மின்சார வாரியம் சிக்கனம் கருதி இரண்டு மின்கம்பங்கள் மட்டுமே நடப்பட்டுள்ளது. அன்னவாசல் மருத்துவமனை எதிரே பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி பல நாட்கள் ஆகியும் பணிகள் இன்னும் முடிக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

Tags : slowdown ,
× RELATED உலக பொருளாதாரம் மந்தமான நிலையில்...