×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்

அறந்தாங்கி, மார்ச்3: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் கடந்த 1ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்து தலைமை தாங்கினார். அறந்தாங்கி நகர திமுக செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். விழாவில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ரகுபதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு, திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளில், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து, குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கினார். நிகழ்ச்சியில் அறந்தாங்கி வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஆலங்குடி எம்.எல்.ஏவுமான மெய்யநாதன், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பொன்கணேசன், மணமேல்குடி ஒன்றிய திமுக செயலாளர் சக்திராமசாமி, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிராஜன், மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : MK Stalin ,children ,Aranthangi Government Hospital ,birthday ,DMK ,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...