×

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

பொன்னமராவதி,மார்ச்3: பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து பேரணி நடந்தது மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் ஜெயராணி முன்னிலையில் பேரணியை மேலத்தானியம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைச்செல்வி,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பள்ளியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் பள்ளியில் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு ெசன்றனர். இதில் மேலத்தானியம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அமுதவள்ளி முருகேசன், இடைநிலை ஆசிரியர் மணிக்குமார், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் நர்கிஸ் ஹபிபுல்லா மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை...