×

தென்மண்டல திறனறிவு போட்டி கயத்தாறு மதர்தெரசா பள்ளி மாணவி சாதனை

கயத்தாறு, மார்ச் 3:சாய் பவுண்டேசன் சார்பில், நெல்லையில் தென்மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையேயான திறனறிவு போட்டி நடைபெற்றது. இதில் தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தபோட்டியில் கலந்துகொண்ட கயத்தாறு மதர்தெரசா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 4ம் வகுப்பு மாணவி லோகேஷ்வரி 3ம் பரிசு பெற்று சாதனை படைத்தார். அவருக்கு ஈரோட்டில் நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

தென்மண்டல அளவில் 3ம் இடம் பிடித்த மாணவிக்கு பள்ளி சார்பில் நடந்த பாராட்டு விழாவில் தாளாளர் சார்லஸ் அடிகளார் மற்றும் பள்ளி முதல்வர் சகாயரெஜி பவுலா ஆகியோர் சால்வை அணிவித்து வெற்றி கோப்பை வழங்கினர்.  மேலும் மாணவியை போட்டி தேர்வுக்கு தயார்படுத்திய ஆசிரியர்கள் அருணாசலம், சோபியா, புஷ்பராணி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

Tags : South Central Skills Competition ,
× RELATED தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி