×

பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல் பாதுகாப்பு கேட்டு மாணவி கலெக்டரிடம் புகார் மனு

தூத்துக்குடி, மார்ச் 3: தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கோரி கலெக்டரிடம் கல்லூரி மாணவி புகார் மனு அளித்தார். தூத்துக்குடி மேல அழகாபுரியை சேர்ந்தவர் சிவபெருமாள் மகள் காசிராமலெட்சுமி. தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவரது உறவினரான எதிர்வீட்டை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான வினீத்(23) என்பவர், காசிராமலட்சுமியை கடந்த சில மாதங்களுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்துள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியான அவர் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் போலீசார், கடந்த பிப்.8ம் தேதி வினீத் மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால் வினீத் செல்போனில் பதிவு செய்து மிரட்டல் விடுத்து வரும் வீடியோ காட்சிகளை அனைத்து மகளிர் போலீசார் மீட்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என காசி ராமலெட்சுமி தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் மேல்நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று காசி ராமலெட்சுமி தனது பெற்றோருடன் கடந்த 15ம் தேதி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனிடையே நேற்று காசி ராமலெட்சுமி தனது பெற்றோருடன், கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் புகார்மனு அளித்தார். அதில், கடந்த 8ம் தேதி வழக்கு பதிவு செய்தது முதல் வீனீத்தை பிடிக்க போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மேலும் அவர் என்னை பலாத்காரம் செய்த வீடியோ உள்ளது. அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டுகிறார். இதனை நான் புகாரில் குறிப்பிட்டிருந்தேன். எப்ஐஆரிலும் பதிவாகி உள்ளது. ஆனால் அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை. அவரை கைது செய்து 3 நாட்களில் இந்த வீடியோக்களை மீட்டு நடவடிக்கை எடுப்பதாக உயரதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் இதுவரையில் நடவடிக்கை இல்லை.
எங்களின் எதிர் வீட்டில்தான் அவர் வசித்து வருகிறார். இதனால் அவரது  மிரட்டலுக்கு பயந்து தற்போது நான் பெற்றோருடன் வைகுண்டத்தில் உறவினர்கள் வீட்டில் வசித்து வருகிறேன். போலீசார் வினீத்தை கைது செய்ய வேண்டும். அவரிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதே நேரத்தில் எனக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்கிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Student ,collector ,rape ,
× RELATED கிணற்றில் மூழ்கி மாணவன் பலி