×

நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யுங்கள்

கும்பகோணம், மார்ச் 3: டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டுமென கும்பகோணத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் சிவசங்கரன், ரங்கராஜன், நாகராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர் அய்யப்பன் வரவேற்றார்.

கூட்டத்தில் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில் வரும் 12ம் தேதி நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கான தொகையை காலம்தாழ்த்தாமல் வழங்க வேண்டும். டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை ஆதரவு என்ற பெயரில் கூடிய வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தி உயிர் பலியான சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார தலைவர்கள் பாலதண்டாயுதம், சிவஞானம், சபீர்ரஹ்மான், மகளிரணி தலைவி ஜீவா மற்றும் பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் ராஜ் நன்றி கூறினார்.

Tags : centers ,
× RELATED நெல்லை, தென்காசி மாவட்டங்களில்...