×

சேமிப்பு போல் காப்பீடும் வாழ்க்கைக்கு முக்கியம் எல்ஐசி தென் மண்டல மேலாளர் பேட்டி

பட்டுக்கோட்டை, மார்ச் 3: பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூரில் புதிய சேட்லைட் எல்ஐசி கிளை துவக்க விழா நடந்தது. பட்டுக்கோட்டை தலைமையின்கீழ் துவக்கப்பட்ட 4வது துணை கிளையான மதுக்கூர் எல்ஐசி கிளை திறப்பு விழாவுக்கு முதுநிலை கோட்ட மேலாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். மதுக்கூர் துணை கிளை மேலாளர் மகேந்திரன் வரவேற்றார். புதிய கிளையை எல்ஐசி சென்னை தென் மண்டல மேலாளர் கதிரேசன் தலைமை வகித்து திறந்து வைத்து பேசுகையில், இப்பகுதி பொதுமக்கள் எல்ஐசி பாலிசி சேவைகளை மதுக்கூரில் பெற்று கொள்ளும் வாய்ப்பை இந்த புதிய கிளையை திறந்ததன் மூலம் ஏற்படுத்தியுள்ளது. புதிய பாலிசி எடுப்பதற்கு ஏற்கனவே எடுத்துள்ள பாலிசிக்கு பணம் செலுத்துதல், புதுப்பித்தல், வங்கி கணக்கு எண் பதிவேற்றம் செய்தல், இன்னும் பல சேவைகளை மதுக்கூர் கிளை வழங்கும்.

இந்திய அரசின் பல்வேறு திட்டங்களை எல்ஐசி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. பிரபலமான விற்பனை திட்டங்களான ஜீவன்உமாங், ஒற்றை பிரீமிய திட்டம், ஜீவன் சாந்தி, ஜீவன் ஆனந்த், ஜீவன் லாப் மற்றும் குழந்தைகளுக்கான ஜீவன்தருன், மணிபேக் பாலிசி, சேமிப்பு கலந்த இன்சூரன்ஸ் திட்டங்களாக விற்பனை செய்து வருகிறது. எனவே இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். வணிக மேலாளர் ராம்குமார், விற்பனை மேலாளர் நேரு மற்றும் அலுவலர்கள் பொதுமக்கள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை கிளை மேலாளர் குமார் நன்றி கூறினார்.

இதைதொடர்ந்து சென்னை தென் மண்டல மேலாளர் கதிரேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எல்ஐசி 63 ஆண்டுகளை நிறைவு செய்து 64ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது. இவ்வளவு போட்டியாளர்கள் இருப்பினும் பொதுமக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். சேமிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் காப்பீடும் உங்கள் வாழ்க்கைக்கு முக்கியம் என்றார்.

Tags : LIC South Zone Manager ,
× RELATED தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு...