×

அடிப்படை வசதி கேட்டு அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 3: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரியில் உள்ள பாரதிதாசன் மாதிரி கல்லூரியில் பணியாற்றி வரும் 36 கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தாததை கண்டித்தும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்து தரக்கோரியும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்துதர வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Government college students ,facilities ,
× RELATED புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடிப்படை...