×

எவரெஸ்ட் பாலிடெக்னிக்கில் வளாக நேர்முகத்தேர்வு

கடையநல்லூர், மார்ச்3: கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் ஜெ.எம்.ஐ குரூப், ஜெ.எம் ப்ரிடெக் இந்தியா நிறுவனம் சார்பில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மற்றும் எல்க்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்  மாணவர்களுக்கான கேம்பஸ் இண்டர்வியூ நடந்தது.

எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனர் முகைதீன் அப்துல் காதர்  தலைமை வகித்தார். முதல்வர் தமிழ் வீரன் முன்னிலை வகித்தார். கேம்பஸ் இன்டர்வியூக்கான நேர்முக தேர்வை ஜெ.எம் ப்ரிடெக் இந்தியா நிறுவனத்தின் மனிதவள மேலாளர்கள் சுரேந்தர் மற்றும் கிருஷ்ணா நடத்தினர். தேர்வான மாணவர்களுக்கு எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனர் முகைதீன் அப்துல் காதர் பணி நியமன ஆணையை வழங்கினார்.
ஏற்பாடுகளை எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியின் துறைத்தலைவர்கள் வெங்கடாசலம், தங்கபிரதீப், செந்தூர்பாண்டியன், மேலாளர் மகேஷ்வரன் மற்றும் வாகன மேலாளர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Everest Polytechnic ,
× RELATED கடையநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்