×

முத்துப்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தேர்வு

முத்துப்பேட்டை, மார்ச் 3: முத்துப்பேட்டை எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நகர தலைவர் அகமது பாட்சா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக நகர இணை செயலாளர் மாலிக் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிசார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் புதிய நகர செயலாளராக ஹலீல் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். அதேபோல் துணை பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் நகர துணை தலைவர் சவுக்கத் அலி மற்றும் நகர செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : SDBI ,Party Executives ,
× RELATED விருதுநகரில் விஜயகாந்த் மகன்...