×

முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்ற இருவர் அதிரடி கைது

முத்துப்பேட்டை, மார்ச் 3: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் மற்றும் தொண்டியக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடப்பதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்த இடும்பாவனம் கீழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் கேசவன்(25), தொண்டியக்காடு கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் பாலசரதன்(21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 500கிராம் எடை கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Muthupettu ,
× RELATED ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய 2 பேர் கைது