×

நீடாமங்கலம் காவல் நிலையம் 98வது ஆண்டு விழா, கண்காட்சி

நீடாமங்கலம், மார்ச் 3: நீடாமங்கலம் காவல் நிலையத்தின் 98வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காவல் நிலையம் கடந்த 2.3.1922ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் 98வது அண்டில் அடிஎடுத்து வைக்கும் நிலையில், நேற்று ஆண்டுவிழா நடந்தது. திருவாருர் மாவட்ட எஸ்.பி துரை கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து கேக் வெட்டினார். பிறகு காவலர்களின் சங்கம நிகழ்ச்சி, காவல்களின் செயல்பாடு குறித்த கண்காட்டிகளை பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட்டனர். அவர்களிடம் துப்பாக்கிகளின், ரகங்கள் அதன் செயல்பாடு களை போலீசார் விளக்கினர். மேலும் காவலர்கள் எந்த மாதிரியான தொப்பிகளை யார்யார் அணிய வேண்டும், தலைவகசம் அவசியம் போன்றவைகள் எடுத்துறைக்கப்பட்டது. காவல்துறை பொது மக்களுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் நடந்தது. மரக்கன்றுகள் நடப்பட்டது. காவலர்கள் மற்றும் பொது மக்கள் ரத்ததானம் வழங்கினர். மாலை பொதுமக்கள் சந்திப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் எஸ்பி துரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

]சிறப்பு விருந்திரனர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற காவலர்கள் கவுரவிக்கப்பட்டனர். பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்ட்டது. நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி அன்பழகன், டிஎஸ்பிகள், மன்னார்குடி கார்த்திக், திருவாரூர் பிருந்தா, முத்துப்பேட்டை இனிகோதிவ்யன் மற்றும் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள், சப்இன்ஸ் பெக்டர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள், வர்த்தகர்கள், கார் ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா நன்றி கூறினார்.

Tags : Needamangalam Police Station 98th Anniversary ,Exhibition ,
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!