×

பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் வினாடி வினா போட்டி


கருங்கல், மார்ச் 3 : கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வினாடி வினா போட்டி நடைபெற்றது. பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘‘அறிவியலில் பெண்கள்’’ என்னும் இவ்வாண்டிற்கான கருப்பொருளின் அடிப்படையில் மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து முதல், இரண்டு மற்றும் மூன்று சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி சுற்றுக்கு தேர்வு பெற்ற மூன்று குழுக்களிடம் அறிவியல் தொடர்பான வினாக்கள் கேட்கப்பட்டு, தொடர்ந்து விளையாடிய கேலக்ஸி அணி பிரிவினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களையும் பள்ளி நிர்வாகம் பாராட்டியது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.

Tags : Quiz competition ,Best CBSE School ,
× RELATED வாக்காளர் தின விழிப்புணர்வு வினாடி வினா போட்டி ஜன.21ம் தேதி நடக்கிறது