×

என்.ஐ கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் கண்காட்சி

தக்கலை, மார்ச் 3 : நவீன இந்தியாவை உருவாக்கும் பொருட்டு மாணவ. மாணவிகளிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டு தோறும் அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தற்போது வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் பற்றிய தகவல்களுடன் கல்லூரியில் உள்ள பயோடெக்னாஜி, மைக்ரோ பயலாஜி, கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், கம்பியூட்டர் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

ரோபோட் இயந்திரம் முதல் இன்றைய தலைமுறைகள் வரையுள்ள கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள் மாடல்களுடன் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை தக்கலை பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரியில் உள்ள அனைத்து துறை சார்ந்த மாணவர்களும் கலந்து கொண்டு கண்டு களித்தார்கள். சிறப்பான வகையில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர்.எஸ்.பெருமாள் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பேராசிரியர் பிரியா சி.நாயர், தீபா, ராஜலெட்சுமி, சங்கீதா, தன்யா, வினில்பிரியா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். கல்லூரி தாளாளர் ஏ.பி மஜித்கான், மனித வள மேம்பாட்டு இயக்குநர் கே.எ ஜனார்த்தனன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : National Science Exhibition ,NI College of Arts ,
× RELATED அழகியமண்டபத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி