×

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ஈரோடு, மார்ச் 3:  ஈரோட்டில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 8 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது ஈரோடு மாவட்டத்தில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் மீது மாவட்ட காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை ஜாமீனில் வெளியில் வர முடியாத குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்து வருகின்றனர்.
இதில், கடந்த 2 மாதத்தில் மட்டும் ஈரோடு மாவட்டத்தில் 10 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மேலும், 8 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க ஈரோடு எஸ்பி சக்திகணேசன், கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரைத்துள்ளார்.இதுகுறித்து ஈரோடு எஸ்பி சக்திகணேசன் கூறுகையில்,`தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளோம்.

இதில், ஈரோடு கருங்கல்பாளையம் வாய்க்கால் கரையோரத்தில் கட்டிட தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கைதான பழங்குற்றவாளிகள் 5 பேர் மற்றும் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி, அடிதடியில் ஈடுபட்ட பத்து என்ற பத்மநாதன், சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர் என 8 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரைத்துள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் கலெக்டர் அதற்கான உத்தரவினை வழங்க உள்ளார்’ என்றார்.

Tags : persons ,gangs ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...