×

வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை

கோவை, மார்ச்.3:  கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி பட்டியல் வெளியிட்டது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில்  கலெக்டர் ராஜாமணி தெரிவித்ததாவது: கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு  வாக்குச்சாவடி பட்டியல் கடந்த மாதம் 26ம் தேதி வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் திருத்தப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல் வரும் 5ம் தேதி அன்று வெளியிடப்படும். நிறைவு செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல் அச்சிட்டு முடித்து விநியோகம் செய்யும் பணி முடிவுற்றப்பிறகு, வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெறும். வரும் 20ம் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 1245 வாக்குச்சாவடிகளும், 7 லட்சத்து 44 ஆயிரத்து 147 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 40 ஆயிரத்து 813 பெண் வாக்காளர்களும்  203 இதர வாக்காளர்களும் என மொத்தம் 14 லட்சத்து 85 ஆயிரத்து 163 வாக்காளர்கள் உள்ளனர். பொள்ளாச்சி நகராட்சியில்  36 வார்டுகளில் 82 வாக்குச்சாவடிகளும், 39 ஆயிரத்து 7 ஆண் வாக்காளர்களும், 41 ஆயிரத்து 318 பெண் வாக்காளர்களும், 15 இதர வாக்களர்களும் என மொத்தம் 80 ஆயிரத்து 340 வாக்காளர்கள் உள்ளனர். வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகளில் 84 வாக்குச்சாவடிகளும், 28 ஆயிரத்து 426 ஆண் வாக்காளர்களும் 29 ஆயிரத்து 224 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என மொத்தம் 57 ஆயிரத்து 653 வாக்காளர்கள் உள்ளனர். மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகளில் 62 வாக்குச்சாவடிகளும், 28 ஆயிரத்து 422 வாக்காளர்களும், 30 ஆயிரத்து 159 பெண் வாக்காளர்களும்  5 இதர வாக்காளர்களும் என மொத்தம் 58 ஆயிரத்து 586 வாக்காளர்கள் உள்ளனர். 37 பேரூராட்சிகளில் உள்ள 585 வார்டுகளில், 718 வாக்குச்சாவடிகளும், 2 லட்சத்து 80 ஆயிரத்து 510 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 92 ஆயிரத்து 984 பெண் வாக்காளர்களும், 77 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5 லட்சத்து 73 ஆயிரத்து 571 வாக்காளர்கள் உள்ளனர்.

கோவை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில்  775 வார்டுகளில் 2191 வாக்குச்சாவடிகளும், 11 லட்சத்து 20 ஆயிரத்து 512 ஆண் வாக்காளர்களும், 11 லட்சத்து 34 ஆயிரத்து 498 பெண் வாக்காளர்களும் 303 இதர வாக்காளர்களும் என மொத்தம் 22 லட்சத்து 55 ஆயிரத்து 313 வாக்காளர்கள் உள்ளனர். இவ்வாறு கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார். இக்கூட்டத்தில்  மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முத்துகருப்பன்  மற்றும் அசரயில் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : dignitaries ,party ,
× RELATED குளச்சலில் கேரள பேஷன் ஜூவல்லரி திறப்பு