×

உரிமம் பெறாத 41 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல்

கோவை, மார்ச் 3:  கோவை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செய்லபட்டு வந்த 41 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களை மூடக்கோரி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் குறித்த ஆய்வினை வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வில் 50 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. 5 நிறுவனங்கள மட்டும் உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் 45 நிறுவனங்களில் முதல்கட்டமாக 41 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினர் சீல் வைத்துள்ளனர். தொடர்ந்து மற்ற நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags : water treatment plants ,
× RELATED கோடை காலத்தில் தண்ணீர் தேவை...