×

எம்.பி.என். எம்ஜெ கல்லூரியில் விளையாட்டு விழா

ஈரோடு, மார்ச் 3: சென்னிமலை எம்.பி. நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் 19ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முதல்வர் ரமேஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி இயக்குநர்கள் பாலசுப்பிரமணியன், எம்.வி. தெய்வசிகாமணி, உடற்கல்வி இயக்குனர் ஜஸ்டின் புரூஸ் ஆகியோர் வரவேற்புரையாற்றினார். இதில், மாணவ, மாணவிகளுக்கு குழு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. தடகளப் போட்டிகளில் நீலநிற அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. சிறப்பு விருந்தினராக, ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சதீஷ்குமார் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

Tags : Sports Festival ,MJ College ,
× RELATED எம்.பி.என். எம்.ஜெ. கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்