×

காரமடை அரங்கநாதர் கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மேட்டுப்பாளையம், மார்ச் 3:  கோவை காரமடை அரங்கநாதர் கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.  விழாவையொட்டி, கொடி மரத்தின் அருகே உள்ள கருடாழ்வார் சிலைக்கு பால், திருமஞ்சனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. இதையடுத்து கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி மேளதாளம் முழங்க கோயில் வளாகத்தை சுற்றி வலம் வந்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கருடாழ்வார் கொடி ஏற்றப்பட்டது. இக்கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ெதாடர்ந்து தினமும் பல்வேறு சிறப்பு வைபவங்கள், அன்னவாகனம், சிம்மவாகனம், அனுமந்த வாகனம், திருக்கல்யாண உற்சவம் என தொடர்ச்சியாக நடைபெற்று வரும் 8ம் தேதி அரங்கநாதர் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளும் திருத்தேரோட்ட நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

Tags : Karamadai Aranganatha Temple ,Theri Tiru Festival ,
× RELATED கடும் வெயிலால் வாடிய வாழைகள்