×

பிப்ரவரி லீப் ஆண்டின் இறுதி நாளில் 82 குழந்தைகள் பிறந்தன: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர், மார்ச் 3: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பிப்ரவரி லீப் ஆண்டின் இறுதி நாளில் 82 குழந்தைகள் பிறந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பூமி, தன்னைத்தானே சுற்றிவர 24 மணி நேரமும், சூரியனை சுற்றிவர 365, 1/4 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இந்த கால் நாளை எந்த கணக்கில் சேர்ப்பது என்று அறிவியல் அறிஞர்கள் தீவிரமாக ஆலோசித்தனர். அந்த கால் நாளை நான்கு நாட்களுக்கு கணக்கில் வைத்து பிப்ரவரி மாதத்தின் ஒருநாளாக சேர்க்கப்பட்டது. இதற்கு லீப் ஆண்டு என்று பெயர் வைக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 29ம் தேதியில் பிறக்கும் குழந்தைகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறந்தநாள் கொண்டாடும் நிலை உருவாகிறது.

அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 29ம்தேதி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 82 குழந்தைகள் பிறந்தன. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகள், வாணியம்பாடியில் 7குழந்தைகள், ஆம்பூரில் ஒரு குழந்தை, குடியாத்தத்தில் 4 குழந்தைகள், அரக்கோணம், வாலாஜாவில் தலா 2 குழந்தைகள் என்ற மொத்தம் 24 குழந்தைகள் பிறந்துள்ளன.

அதேபோல், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 35 குழந்தைகள் என்று மொத்தம் 82 குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த குழந்தைகள் தங்களது பிறந்தநாளை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடுவார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Health Department ,
× RELATED தமிழகத்தில் மேலும் 1,162 பேருக்கு கொரோனா;...