×

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான தடகள போட்டிகள்

ஊட்டி, மார்ச். 2:நீலகிரி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உலக திறனாளர்கள் கண்டறியும் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தது. குன்னூர் கல்வி மாவட்டத்திற்கு கடந்த 27ம் தேதி ஊட்டி அரசு கலை கல்லூரி மைதானத்திலும், கூடலூர் கல்வி மாவட்டத்திற்கு 28ம் தேதி மார்த்தோமாநகர் பகுதியில் உள்ள மைதானத்திலும் நடந்தது. இப்போட்டியில் 6,7 மற்றும் 8ம் வகுப்புகளை சேர்ந்த சுமார் 1100 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு 100மீ, 200மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயசந்திரன் செய்திருந்தார்.

ஆவணமின்றி தங்கம் கடத்தியவர் கைது
பாலக்காடு, மார்ச் 2:கேரள மாநிலம் திருச்சூர் சுராஜ் மைதானம் எம்.ஓ.,சாலையில் சுங்கவரித்துறையினர் ரோந்து பணியில் நேற்று ஈடுப்பட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் நின்றுள்ளார். இவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். மேலும் சந்தேகமடைந்த அதிகாரிகள் இவரது உடமைகளை பரிசோதனை செய்ததில் 1.93 கோடி ரூபாய் மதிப்பிலான 4 கிலோ 651 கிராம் தங்கநகைகள் இருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் ராஜஸ்தானைச் சேர்ந்த ரபீக் (35) என்றும், மும்பையிலிருந்து ரயிலில் திருச்சூருக்கு வியாபாரத்திற்கு தங்கநகைகள் வாங்கி வந்ததாக தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கநகைகள் கடத்திய ரபீக்கை சுங்கவரித்துறையில் கைது செய்து, கடத்தல் தங்கநகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Athletic competitions ,schoolchildren ,
× RELATED நைஜீரிய தீவிரவாதிகள் கடத்திய 300 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு