×

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அதிக திறன் கொண்ட சிசிடிவி கேமரா பொருத்த வலியுறுத்தல்

ஈரோடு, மார்ச் 2:   ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அசாம்பாவித சம்பவங்களை தடுக்க அதிக திறன் (பிக்சல்) கொண்ட சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.   ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், டவுன் பஸ்களுக்கும், மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளுக்கு வந்து செல்லும் பஸ்களுக்கும், கோவை, சேலம், சென்னை, திருநெல்வேலி போன்ற வெளிமாவட்டங்களுக்கும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் வந்து செல்ல வசதியாக தனித்தனியே 5 பஸ் பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மினி பஸ்களுக்கு தனி பஸ் ஸ்டாண்டும் உள்ளது. இதனால், ஈரோடு பஸ் ஸ்டாண்டிற்கு தினந்தோறும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்வதால், எப்போதும் பயணிகள் கூட்டம் காணப்படும். இதனால், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் சுற்றி திரியும் மர்மநபர்கள் பயணிகளிடம் வழிப்பறி, பிக்பாக்கெட், உடமைகளை திருடி செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.இதை தடுக்க மாவட்ட காவல் துறை மூலம் பஸ் ஸ்டாண்டில் புறகாவல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பஸ் ஸ்டாண்டில் அசாம்பாவித சம்பவங்களை முன்கூட்டியே தடுப்பதற்காக காவல் துறை அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஆண்டு மாநகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலும், நுழைவு வாயில்களிலும் 36 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க புற காவல் நிலையத்தில் போலீசார் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் புறகாவல் நிலையத்தில் அதிகபட்சம் 2போலீசார் மட்டுமே பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.

கேமராக்கள் அதிக திறன் இல்லாததாலும், போலீசாரின் குற்ற தடுப்புகளுக்கு ஏற்றாற்போல் கேமராக்கள் கூடுதலாக பொருத்தவில்லை. இதனால், புற காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் 2போலீசாரில் ஒருவர் கேமராவை கண்காணிக்கவும், மீதமுள்ள ஒருவர் கேமராக்கள் இல்லாத பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள சென்று விடுகிறார். இதன் காரணமாக பிற பகுதிகளில் ஏதேனும் அசாம்பாவிதம் ஏற்பட்டால் போலீசாரால் விரைந்து செல்ல முடிவதில்லை.    எனவே, ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அதிக திறன் (பிக்சல்) கொண்ட சிசிடிவி கேமராக்கள் கூடுதலாக பொருத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என போலீசார் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : bus stand ,Erode ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை