×

மாணவிக்கு காதல் தொல்லை

சென்னை, மார்ச் 2: சென்னை திருவேற்காடு ராஜரத்தினம் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் கிண்டி அருகே உள்ள ஈக்க்காட்டுதாங்கலில் உள்ளி ஒரு பள்ளியில் டான்ஸ் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இந்த பள்ளியில் படித்து வரும் பிளஸ்-1 மாணவி ஒருவரை கடந்த 6 மாதங்களாக டான்ஸ் வகுப்பு வரும் போது எல்லாம் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவி சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் டான்ஸ் மாஸ்டர் மணிகண்டன் மீது புகார் அளித்தனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டான்ஸ் மாஸ்டர் மணிகண்டன் பிளஸ்-1 மாணவி பின் தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி தொந்தரவு செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மணிகண்டனை நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர்.

Tags : love affair ,student ,
× RELATED நெல்லை அருகே தலை துண்டித்து காதல்...