×

பைக்கில் குட்கா கடத்திய வாலிபர் கைது


புழல், மார்ச் 2: சென்னை ஜிஎன்டி சாலை, செங்குன்றம் மார்க்கெட் பகுதியில் நேற்று காலை 9 மணியளவில் செங்குன்றம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புழல் பகுதியில் இருந்து செங்குன்றம் நோக்கி வேகமாக பைக் ஓட்டி வந்த ஒரு வாலிபரை மடக்கி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், பைக் பெட்டியை திறந்து சோதனை செய்தனர். அந்த பெட்டிக்குள் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட 6 கிலோ போதை பொருட்கள் இருந்ததை கண்டறிந்தனர்.
இதையடுத்து போதை பொருள் மற்றும் பைக்குடன் அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். இதில், அவர் சென்னை அருகே கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த துரைசாமி (37) என தெரியவந்தது. அவரை கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வந்தாரா, செங்குன்றம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக பைக்கில் கொண்டு வந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Kutka ,
× RELATED ஓமலூர் அருகே ஆர்.சி.செட்டிப்பட்டியில்...