×

பசுமை காஞ்சி அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம். மார்ச் 2: காஞ்சிபுரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் உபயோகத்தினை தவிர்க்க கோரி பசுமை காஞ்சி அமைப்பு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பசுமை காஞ்சி அமைப்பின் நிர்வாகி எஸ்கேபி கோபிநாத் பாலவெங்கடேசன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளர் பிரபு (எ) பச்சையப்பன், கேஎஸ்ஆர் பெட்ரோல் பங்க் நிர்வாக இயக்குநர் ரவி காளத்தி,  சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன், காஞ்சி குளோபல் பள்ளி தாளாளர் ஜூலியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி, சங்கரா கலை அறிவியல் கல்லூரி, பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் பள்ளி, காஞ்சி குளோபல் சிபிஎஸ்இ பள்ளி, பச்சையப்பன் மகளிர் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இருந்து தொடங்கிய பேரணி, ரயில்வே சாலை, காந்தி சாலை, காமராஜர் சாலை, பேருந்து நிலையம், ஆஸ்பிட்டல் சாலை வழியாக மீண்டும் அன்னை அஞ்சுகம் திருமண நிலையத்தை பேரணி வந்தடைந்தது. காஞ்சிபுரம் நகர பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்தல் உள்ளிட்டவைகளை விழிப்புணர்வு செய்யும் நோக்கில் இந்த பேரணி நடைபெற்றது.

Tags : rally ,Green Kanchi Organization ,
× RELATED அமெரிக்காவில் முக்கிய நகரங்கள்...