×

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி கிருத்திகை கோலாகலம்

திருப்போரூர், மார்ச் 2: திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலில் மாசி கிருத்திகையையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கார், பைக், வேன், பஸ்களில் குவிந்தனர்.பின்னர் கோயிலை ஒட்டி உள்ள குளத்தில் நீராடி மொட்டை அடித்து வேல் அலகு தரித்து பால் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். திருப்போரூர் கந்தசாமி கோயில் திருச்சபை மற்றும் பக்த ஜன சபா  சார்பில் முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்டு மாடவீதிகளில் உலா வந்தார்.  விழாவில் திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இராஜேந்திரன், எஸ்.ஐ. ராஜா, எஸ்.எஸ்.ஐ.க்கள் கோதண்டன், மணி உள்பட போலீசார், 100க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இரவு 7 மணிக்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.உத்திரமேரூர்:உத்திரமேரூரில் ஆனந்தவல்லி நாயக சமேத சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் தெப்போற்சவ விழாவையொட்டி தேவி, பூதேவிகளுடன் சுந்தரவரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோயில் குளத்தில் தேவி பூதேவிகளுடன் உற்சவர் சுந்தரவரதராஜ பெருமாள் தெப்ப உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Tags : Masi Krittika Kolakallam ,Thirupporeur Kandaswamy Temple ,
× RELATED கொடியேற்றத்துடன் தொடங்குகிறது...