×

தஞ்சையில் பிச்சை எடுத்த 2 சிறுவர்கள் மீட்பு சைல்டு லைன் அமைப்பினர் நடவடிக்கை

தஞ்சை, மார்ச் 2: தஞ்சையில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை நேற்று சைல்டு லைன் அமைப்பினர் மீட்டனர். தஞ்சை மாவட்டத்தில் பொது இடங்களில் சுற்றி திரியும் சிறுவர்கள், சிறுமியர்களை மீட்க, சைல்டு லைன் அமைப்பினருக்கு கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து சைல்டு லைன் இயக்குநர் பாத்திமாராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று தஞ்சை நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மருத்துவகல்லுாரி சாலை மங்களபுரத்தில் உள்ள சர்ச் ஒன்றில் கணேசன் (17 பெயர் மாற்றம்) என்ற சிறுவன் வெற்றிலை போட்டுக்கொண்டு, அங்குள்ள முதியவர்களுடன் இணைந்து பிச்சை எடுத்துக்கொண்டு இருப்பதாக தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்று, அச்சிறுவனை மீட்டு விசாரித்தனர். ஆனால் அச்சிறுவன் ஆப்ரகாம் பண்டித்தெருவை சேர்ந்தவர் எனவும், பெற்றோர்கள் பெயர் குறித்த தகவல்களை முன்பின் முரணாக தெரிவித்துள்ளார். இதனால், அச்சிறுவனை குழந்தைகள் காப்பாகத்தில் வைத்துள்ளனர்.

இதைபோல,நாஞ்சிக்கோட்டை சாலையில் ஆர்எம்எஸ்.காலனியில், சீனிவாசன்(13 பெயர் மாற்றம்) என்ற சிறுவன் ஒருவன், கையில் வேப்பலையுடன் ஜோதிடம் கூறுவதாக,பொதுமக்களிடம் காசு வசூல் செய்துக்கொண்டு இருந்தார். அவரை சைல்டு லைன் அமைப்பினர் பிடித்து விசாரித்த போது, மன்னார்குடி சொந்த ஊர் என்றும், தற்போது தஞ்சை மேலவஸ்தாசாவடியில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், ஜோதிடம் சொல்லுவது தொழில் என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : children ,asylum seekers ,
× RELATED 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று...