×

மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு சேதுபாவாசத்திரம் அருகே பரபரப்பு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தட்டி கேட்ட 3 பேருக்கு வெட்டு

சேதுபாவாசத்திரம், மார்ச் 2: சேதுபாவாசத்திரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை தட்டிக் கேட்ட 3 பேரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள கரிசவயல் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை என்பவர் கடந்த மூன்று மாதங்களாக அனிதாவிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்து இளம்பெண் தனது மாமனார் கணேசன்(60), மாமியார் பவளக்கொடி(55), நாத்தனார் சத்யா(33) ஆகியோரிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த மூன்று பேரும் நேற்று முன்தினம் இரவு அய்யாத்துரை வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த அய்யாத்துரை மற்றும் அவரது நண்பர்கள் செருபாலக்காடு வீரமணி, பாடுவான்கொல்லை பெரியசாமி ஆகியோர் மூன்று பேரையும் தரக்குறைவாக திட்டியுள்ளார். மேலும் அரிவாளால் கணேசன், பவளக்கொடி, சத்யா ஆகிய 3 பேரையும் வெட்டி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சதியா, பவளக்கொடி ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் கணேசன் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அய்யாத்துரை, வீரமணி, பெரியசாமி ஆகிய மூன்று பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Sexual harassment ,government ,
× RELATED கழுத்தை அறுத்து வாலிபர் கொலையான...