×

பாஜ ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வாசகம்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வாசகம் வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 5 அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேசிய முற்போக்கு தமிழர் கழகம், தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பை சேர்ந்த சார்லஸ் வெற்றிவேந்தன், லயோலா மணி ஆகியோர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மத்திய அரசு மூலம் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை ஆதரிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அடையாளம் தெரியாத சிலர்,  டெல்லி எரிந்தது, அடுத்து சென்னை எரிய வேண்டுமா? என்ற வாசகத்துடன் சிலர் பதாகைகளை ஏந்தி நின்றனர்.

அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் மிரட்டல் தெரிவிக்கும் வகையில் பலகைகளை கையில் ஏந்திய இவர்கள் யார்?, சமூகத்தில் பதற்றத்தை உருவாக்க நினைக்கும் இந்த சமூக விரோதிகள் தமிழகத்தில் வன்முறை நிகழ்த்த திட்டம் உருவாக்கியிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.


Tags : protest ,Baja ,Commissioner ,
× RELATED நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக...