×

32 மையங்களில் 7,902 பேர் எழுதுகின்றனர் மாசி மக திருவிழாவையொட்டி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சிம்ம வாகனத்தில் சுவாமி உலா

பெரம்பலூர், மார்ச்.2: பெரம்பலூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் மாசிமக திருத்தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு நேற்று சிம்ம வாகனத்தில் திரு வீதியுலா நடந்தது. பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ச மேத  பிரம்மபுரிஸ்வரர் திருகோவில் மாசிமகம் பெருந்திருவிழாவை மார்ச் மாதம் 8ம்தேதி வெகுவிமரிசையாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை யொட்டி கோயில் வளாகத்தில் கடந்த 26ம்தேதி காலை திருவிழாவிற்கான முகூர்த்தக் கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 29ம்தேதி வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து முதல் நாளான 29ம்தேதி நேற்று முன்தினம் சனிக்கிழமை ஹம்ச வாகனத்தில் சாமி திருவீதியுலா நடைபெற் றது. இந்நிலையில் நேற்று (1ம்தேதி)சிம்ம வாகனத் தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. முன்னதாக இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் மணி முன்னிலையில், கோவில்குருக்கள் சுவாமி நாத சிவாச்சாரியார் தலை மையில், உதவிகுருக்கள் கவுரி சங்கர் ஆகியோர் நட த்திய சிறப்பு பூஜைகளில், முன்னால் அறங்காவலர் வைத்தீஸ்வரன்,பூக்கடை சரவணன், கீத்துக்கடை குமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், நூற்றுக் கண க்கான பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து வரும் 8ம்தேதி திருவிழா திருத்தேரோட்டம் வெகுவி மரிசையாக நடத்தப்படுகிறது. இடைப்பட்ட தினங்களில் ஒவ்வொரு நாளும் காலையில் திருவிழா கேடயத்தில் சாமி ஊர்வலம் நடக்கிறது. மாலையில் பஞ் சமூர்த்தி புறப்பாடு, பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு புதிதாக செய்யப்பட்ட வெள்ளி ரிஷப வாகன புறப்பாடுகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர் வாகத்தினர் முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து செய்துள்ளனர்.

Tags : car park ,Swamiji ,festival ,Maasi Maha ,Brahmapureeswarar temple ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...