×

பெரம்பலூர் மாவட்ட அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பிளஸ்2 ேதர்வு

பெரம்பலூர்,மார்ச்.2: பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 எனப்படும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன் று(2ம்தேதி) தொடங்கி, வரு கிற 24ம் தேதிவரை நடக்கிறது. பிளஸ்-2 பொதுத் தேர்வை பெரம்பலூர் மாவ ட்டத்தில் அரசு, ஆதிதிராவிடர் நலம், அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 73 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 3,854 மாணவர்கள், 4,048 மாணவிகள் என மொத்தம் 7,902 பேர் 32 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர்.

இதில் கண்பார்வை குறைபாடுடையோர், கைநடுக்கம் உள்ளவர்கள் என மாற்றுத் திறனாளிகள் 17பேர் அரசுப் பொதுத் தேர்வெழுத வசதியாக 17 சிறப்பாசிரியர்கள் தேர்வுத் துறையால் நியமிக்கப் பட் டுள்ளனர். தினமும் காலையில் 10மணிக்குத் தொடங் கி, பகல் 1.15மணி வரை பொதுத் தேர்வு நடக்கிறது. பிளஸ்-2 பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ள 32 தேர்வு மையங்களுக்கும் தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் செய்து தரப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் காப்பி அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீனங்களை தடுக்க 66 பேர் பறக்கும் படையினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்விஅலுவலர்கள் இருவர் ஆகிய மூவருக்கும் தலா இருவரும் மீதமுள்ள 60 பேர் தேர்வு மையங்களில் ஸ்டேண்டிங்பிளையிங் ஸ்குவார்டு எனப்படும் பறக்கும் படையினராகவும் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிளஸ்-1 பொதுத்தேர்வு: பிளஸ்-1 பொதுத் தேர்வு வருகிற 4ம்தேதி தொடங்கி, 26ம்தேதி முடிவடைகிறது. பிளஸ்-1 பொதுத் தேர் வை பெரம்பலூர் மாவட்ட த்தில் அரசு, ஆதிதிராவிடர் நலம், அரசு உதவிபெறும் பள்ளி,தனியார் மற்றும் மெட்ரிக் என 75மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 3,927மாணவர்கள், 4,035 மாணவிகள் என மொத்தம் 7,962 பேர் 32 தேர்வுமையங்களில் எழுதுகின்றனர். 22 பேருக்கு தேர்வெழுதக் கூடிய சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : event ,Perambalur ,district ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...