×

கோமாபுரம் அரசு பள்ளியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

கந்தவகோட்டை, மார்ச்2: கந்தா–்வகோட்டை அருகே கோமாபுரம் அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் மின்கம்பிகள் தாழ்ந்து செல்கிறது. மேலும் அதிகமாக ஒட்டு போட்டிருப்பதால் எந்நேரமும் அறுந்து விழும் நிலையில் உள்ளது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு சாி செய்ய வேண்டும் மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக தற்போது அரசு பள்ளிகளில் ஆசிரியா–்கள் செயல்பாடு அதிகாித்த வண்ணம் உள்ளது. கோமாபுரம் அரசு உயா்நிலைப்பள்ளியின் வளாகத்தில் செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. மேலும் அதிகளவில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து தற்போது அதிக ஒட்டுகளுடன் மின்கம்பிகள் உள்ளன. எந்நேரமும் அறந்து விழும் சூழல் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்பாக சத்துணவு வாங்கி கொண்டிருந்த மாணவி மீது மின்கம்பி அறுந்து விழாமல் அதிர்ஷ்டவசமாக கீழே விழுந்த காரணத்தினால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. இது குறித்து தலைமையாசிரியர் செந்தில்முருகன் ஏற்கனவே மின்வாரியத்தில் புகார் செய்துள்ளார். இருப்பினும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது. எனவே மாணவா–்கள் மீது மின்கம்பிகள் விழுவதற்கு முன்பாகவே மின்கம்பிகளை சாி செய்து தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gomapuram Government School ,
× RELATED திருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை...