×

டவடிக்கை எடுக்க கோரிக்கை பாலம் கட்டும் பணிக்காக சாலையின் குறுக்கே தோண்டிய பள்ளம் சீரமைப்பு

நதிருமயம்,மார்ச்2: திருமயம் அருகே பாலம் கட்டும் பணிக்காக சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளம் தினகரன் செய்தி எதிரொலியால் சரி செய்யப்பட்டது. புதுக்கோட்டை மவட்டம் திருமயத்தில் இருந்து வி.லட்சுமிபுரம் வழியாக நச்சாந்துபட்டி செல்லும் வழியில் என்.புதூர் பகுதியில் கடந்த ஆண்டு பாலம் கட்டும் பணிக்காக சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டது. இதனை தொடர்ந்து பாலம் கட்டும் பணி முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையில் சாலையின் குறுக்கே உள்ள பள்ளத்தை சாி செய்ய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த பள்ளம் நாளுக்கு நாள் அதிகாித்து சுமார் அரை அடி ஆழத்திற்கு சென்று விட்ட நிலையில் அஜாக்கிரதையாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உருவானது.

மேலும் இந்த சாலை திருமயம், நற்சாந்துபட்டி, விராச்சிலை பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் அதிக வாகன போக்குவரத்து உள்ள நிலையில் வாகன ஓட்டிகள் பள்ளத்தை கடக்கும் போது திடீர் பிரேக் போடும் போது பின்னால் வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நற்ச்சாந்துபட்டி புதூர் பகுதியில் பாலம் கட்டும் பணிக்காக சாலையில் தோண்டப்பட்டு சேதமடைந்துள்ள சாலையை உடனே சாி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த வாரம் அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கை தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளங்களை உடனடியாக சரி செய்தனர். இதற்காக செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழ் மற்றும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags :
× RELATED தனியார் உர விற்பனை நிலையங்கள் கூடுதல்...