×

திருமயம் பகுதியில் திறந்த வெளியில் இயங்கும் கல்குவாரி, சிற்ப கலைக்கூடங்களால் உருவாகும் தூசியால் மக்கள் அவதி

திருமயம்,மார்ச்2: திருமயம் பகுதியில் திறந்த வெளியில் இயங்கும் கல் குவாரி கிரஷர்,எம். சாண்ட் தயாரிப்பு, சிற்ப கலைக்கூடங்களால் உருவாகும் தூசியை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதிகளை சுற்றியுள்ள கல் குவாரிகளில் இருந்து பெருமளவிளான கற்கள் அறுத்து அறுக்கப்பட்டு அவைகள் கிரஷர் மூலம் ஜல்லி,எம்.சாண்ட், சிற்ப கலைக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக திருமயம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கல் குவாரிகள்,10க்கும் மேற்பட்ட கிரஷர்கள் இயங்கி வருகிறது. இங்கிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம்,கல், எம்.ஜாண்ட் தயாரிக்கப்பட்டு சிவகங்கை, ராமநாதபுரம்,தஞ்சாவூர், பதுக்கோட்டை,நாகை,திருவாரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கல், மண் உள்ளிட்ட பாறைகள் அனுப்பட்டு வருகிறது.

இந்த கல் குவாரிகள் திருமயம் பகுதியில் உள்ள கிராமப்புறத்தில் இயங்கி வரும் நிலையில் இவைகள் பாதுகாப்பின்றி திறந்த வெளியில் இயங்குவதால் ஒரு கிரஷர் உள்ள பகுதியைச் சுற்றி சுமார் 3 கிமீ சுற்றளவுக்கு பாறைகள் வெட்டி எடுக்கும் போதும், அரைக்கும் போதும் வரும் தூசிகள் காற்றில் பறப்பதாகவும், இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் கடும் அவதியைச் சந்தித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதே போல் திருமயம், ராயவரம் உள்ளிட்ட பகுதிகளில் பொியது, சிறியது என மொத்தம் 50க்கும் மேற்பட்ட சிற்ப கலைக் கூடங்கள் உள்ளன. இவைகள் பெரும்பாலும் கிராம குடியிருப்பு பகுதிக்குள் இருப்பதால் இங்கிருந்து வெளியாகும் கல் தூசிகளால் குடியிருப்பு வாசிகள் பல்வேறு சுவாச நோய்களால் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தொிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் திருமயம் பகுதியில் இயங்கும் கல் குவாரிகள், கிரஷர், எம்.சாண்ட் தயாரிப்பு நிலையம்,சிற்ப கலை கூடங்களை ஆய்வு செய்து அங்கிருந்து தூசிகள் வெளியேறாமல் தடுக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

மேலும் அங்கு பணியுரியும் நபர்களும் பாதுகாப்பின்றி பணியாற்றுவதால் விரைவில் சுவாச நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற பணியாற்றும் நபர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். இது பற்றி திருமயம் பகுதி மக்களிடம் கேட்ட போது திருமயம் பகுதியில் பல ஆண்டுகளாக கல் குவாரிகள், கிரஷர் இயங்கி வந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக அதன் எண்ணிக்கை செயல்படும் நேரம் அதிகாித்து வருகிறது. இதனால் கல் குவாரிகளை சுற்றியுள்ள கிராமங்கள் கல்லில் இருந்து வெளியாகும் தூசிகளால் நிறைந்து அப்பகுதியில் உள்ள மரங்கள் பனி போர்வை போர்த்தியது போல தூசிகளால் மூடி காணப்படுகிறது. இதனிடையே குவாரிகளை விட அதிகமான முறையில் சிற்ப கலைக் கூடங்கள் என்று இயங்கும் கூடங்களில் இருந்து தூசிகள் வெளியாகி சுற்றுபுறத்தை மாசுபடுத்தி வருகிறது.

இதனால் குழந்தைகள் முதல் பொியவர்கள் வரை சுவாச நோய்களால் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் பருவ மழை, பனி காலங்களில் தூசிகள் சற்று குறைந்திருந்தது தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் தூசிகள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. எனவே திருமயம் பகுதியில் பாதுகாப்பின்றி திறந்த வெளியில் இயங்கும் கல் குவாரிகள், கிரஷர், எம்.சாண்ட்,சிற்ப கலை கூடங்களில் வெளியாகும் தூசிகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Kalkwari ,area ,Thirumayam ,
× RELATED திருமயம் அருகே டிரைவருக்கு திடீர் வலிப்பு பஸ் மரத்தில் மோதி நின்றது