×

நடிகர் தாடி பாலாஜி பங்கேற்பு காரைக்கால் நெடுங்காட்டில் ரூ.25 லட்சம் செலவில் சாலை, தகன மண்டபத்திற்கு பூமிபூஜை

காரைக்கால், மார்ச் 2: காரைக்கால் நெடுங்காட்டில் ரூ.25 லட்சம் செலவில் சாலை, தகன மண்டபம், மற்றும் பயணிகள் நிழலகத்திற்கு எம்.எல்.ஏ சந்திரபிரியங்கா தலைமையில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட, கோட்டகம் சாலையை சீரமைக்கவும், அகரமாங்குடி பகுதியில் சுடுகாட்டுக்கு தகன மேடை, தடுப்புச்சுவரை சீரமைக்கவும், அன்னவாசல் பகுதியில் பயணிகள் நிழலகம் அமைக்கவும், அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ சந்திர பிரியங்காவிடம் கடந்த பல மாதங்களாக வலியுறுத்தி வந்தனர். அந்தன் பேரில், காரைக்கால் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட, கோட்டகம் சாலையை சீரமைக்க ரூ.16.29 லட்சமும், அகரமாங்குடி பகுதியில் சுடுகாட்டுக்கு தடுப்புச்சுவர் அமைத்தல், தகன மண்டபம் கட்டுதலுக்கு ரூ.7.19 லட்சமும், அன்னவாசல் பகுதியில் பயணிகள் நிழலகம் ரூ.1.51 லட்சத்தில் கட்டவும், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.எல்.ஏ சந்திர பிரியங்காவிட நிதி ஒதுக்கினார்.

அதன் அடிப்படையில் பூமி பூஜை நிகழ்ச்சி அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது. இதில், எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், அந்தந்த பகுதி பிரமுகர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thadi Balaji ,road ,cremation hall ,Karaikal Nedumkadangal Road ,
× RELATED கோழிக்கோடு பீச் சாலையில் கார்...