×

திருச்சுழி அருகே பள்ளி மாணவிகளை கேலி செய்யும் குடிமகன்கள் டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

திருச்சுழி,மார்ச் 2:  திருச்சுழிஅருகே பள்ளி செல்லும் மாணவிகளை குடிமகன்கள் கிண்டலும் கேலியும் செய்வதால், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழி அருகே உள்ள க.விலக்கிலிருந்து சாயல்குடி செல்லும் சாலையில் கடந்த ஒரு மாதத்திற்கு புதியதாக டாஸ்மாக் கடை துவங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏற்கனவே 24 மணி நேரமும் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிகின்றனர்.

மேலும் க.விலக்கு பகுதி இரு மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக இருப்பதால் கொலை, கொள்ளையில்  ஈடுபடுவர்கள் இரவு முழுவதும்  டாஸ்மாக் கடை பகுதியில் மது அருந்திவிட்டு  நள்ளிரவான பின்பு தங்கள் கைவரிசையை காட்டுவதாக இப்பகுதி  மக்கள் கூறுகின்றனர். மேலும் டாஸ்மாக் கடை இயங்குவதால்  அறிமுகமில்லாத நபர்கள் அதிகளவில் தென்படுகின்றனர்.

மேலும் இங்கு இயங்கக்கூடிய பாரில் எந்த நேரமும் மதுபாட்டில் வாங்கலாமென இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தும்முசின்னம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மதுக்கடை இருப்பதால் பள்ளி முடித்துவிட்டு பள்ளி மாணவ, மாணவியர்கள் இவ்வழியாக திருமலைபுரத்திற்கு நடந்து செல்கின்றனர். தற்போது மது பிரியர்கள் குடித்துவிட்டு மாணவிகளை கிண்டல் செய்வதாகவும் இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் மதுக்கடை ஆரம்பித்த பின்பு இவ்வழியாக மாணவியர்கள் செல்ல அச்சுறுத்தாலாக உள்ளதாகவும், அதனால் இப்பாதை வழியாக செல்வதை தவிர்த்து வருவதாக கூறுகின்றனர். மேலும்  எந்த நேரமும் பார் இயங்குவதால் ,சில தினங்களுக்கு  டாஸ்மாக் கடை இயங்கும் வெட்டவெளியில் நள்ளிரவில் கொலை நடந்தாக கூறப்படுகிறது. எனவே மக்களின் நலன் கருதி இக்கடையை மூடக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து  திருமலைபுரம் பூமிநாதன் கூறுகையில், 11 க.விலக்கு பகுதியில் கடந்த இருபது வருடங்களாக புதியதாக வளர்ந்து வரக்கூடிய பல தரப்பட்ட மக்கள் குடி பெயர்ந்து  வசித்து வருகின்றனர். மேலும் விருதுநகர், ராமநாதபுரம்  மாவட்ட இணைக்கக்கூடிய பகுதியாக இருப்பதால் இரு மாவட்ட மக்களும் இப்பகுதியில் வந்து கூடுகின்றனர். மேலும்  திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பின்பு கடை பகுதியில் தஞ்சமடைகின்றனர்.

இது சம்பந்தமாக  பொதுமக்கள் இப்பகுதி டாஸ்மாக் கடை வேண்டாமென மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கூறினாலும் கண்டு கொள்வதில்லை. பள்ளி மாணவ, மாணவிகள் இவ்வழியாக செல்லவே அச்சப்படுகின்றனர். இப்பகுதி சக்தி வாய்ந்த புற்று கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அதிகளவில் பெண்கள் வருவது வழக்கம் தற்போது  மதுக்கடை வந்ததால் கோயிலுக்கு வருவதை பெண்கள் தவிர்த்து வருகின்றனர். விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தும்முசின்னம்பட்டி, திருமலைபுரம் கிராம மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், கிராம சபை கூட்டத்தில் டாஸ்மாக் கடை அகற்ற கோரி தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம்’’ எனக் கூறினார்.

Tags : Citizens ,schoolchildren ,Trichy ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...