×

போடி அருகே மலையடிவாரத்தில் பயிர்களை நாசப்படுத்தும் காட்டு மாடுகள் விவசாயிகள் வேதனை

போடி, மார்ச் 2: போடி அருகே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில், மா, கொய்யா, சப்போட்டா கன்றுகளை காட்டுமாடுகள் கடித்து சேதப்படுத்துவதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.போடி அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் குரங்கணி, முட்டம், கொட்டகுடி, முந்தல், அடகுப்பாறை, பிச்சாங்ரை, அத்தியூத்து, வடக்குமலை ஆகிய பகுதிகளில் காப்பி, மிளகு, எலுமிச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். வெயில், காற்று, மழை காலங்களிலும் சிரமத்துடனும், ஒரு சில விவசாயிகள் மலைப்பகுதியில் இருந்து தங்களின் நிலங்களுக்கு 5 கி.மீ முதல் 12 கி.மீ தூரம் வரை நடந்து சென்றும் விவசாயம் செய்து வருகின்றனர்.

சில சமயங்களில் சாகுபடிச் செலவும் அதிகரித்து, இழப்பை சந்திக்கின்றனர். இந்நிலையில் காப்பி, எலுமிச்சை ஆகிய பயிர்களை தவிர்த்துவிட்டு மாற்று பயிராக மா, கொய்யா, சப்போட்டா ஆகிய பயிர்களை நாற்றுகளாக வளர்த்து நட்டு வருகின்றனர். இப்பயிர்களுக்கு ஓஸ் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். காட்டுமாடுகள் தொல்லை: இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில் இருக்கும் காட்டு மாடுகள், தண்ணீருக்காக மலையடிவாரத்துக்கு வந்து விவசாயிகள் வளர்த்து வைத்திருக்கும் மா, கொய்யா, சப்போட்டா கன்றுகளை கடித்து சேதப்படுத்துகின்றன. கடந்த 2 வாரமாக காட்டு மாடுகளால் தொல்லை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இவற்றை விரட்ட பட்டாசுகளை வெடித்து விரட்டுகின்றனர். எனவே, மலையடிவாரத்தில் உள்ள விளைநிலங்களில் காட்டுமாடுகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் கலந்து கொள்பவர்களுக்கு ,ஊக்கத்தொகையாக மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படும். காலை முதல் மாலை வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இந்த பயிற்சிக்கு தகுதியானவர்கள். இதற்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. இதற்கான விண்ணப்பம் இன்று முதல் கம்பம் நகராட்சி அலுவலகத்தில் வாங்கலாம்’ என தெரிவித்துள்ளனர்.

Tags : Bodi ,mountain range ,
× RELATED நாமக்கல்லில் நாட்டுஇன மாடுகள்...