×

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பெரியகுளம், மார்ச் 2: பெரியகுளம் ‘டிரயம்ப்’ நடுநிலைப்பள்ளியில் தேசீய அறிவியல் தினத்தை முன்னிட்டு, அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியினை பெரியகுளம் வட்டாரக்கல்வி அலுவலர் தேவி திறந்து வைத்தார். பின்னர், கண்காட்சியை பார்வையிட்டு மாணவ, மாணவியரை பாராட்டி பேசினார். ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். பள்ளிச் செயலர் ராம்சங்கர் தேசிய அறிவியல் தினம், அறிவியல் மனப்பான்மை, அறிவியல் தினம் கொண்டாடுவதன் அவசியம் ஆகியவை குறித்து உரையாற்றினார்.

நிகழ்ச்சியில், ஆசிரியர் பயிற்றுநர் அபிராமி, பள்ளி உறுப்பினர் கணேஷ், ரமேஷ் உட்பட பெற்றோர் கலந்து கொண்டனர். அறிவியல் தனி உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியை ஆசிரியை சாந்தி ஒருங்கிணைத்தார். கண்காட்சியில் வானம் நீலநிறம் ஏன், நீரூற்று, பளுதூக்கி, பாம்பன் பாலம், பிளமிங் விதி, நவீன வேளாண்மை, பைசா நகர் கோபுரம், நிலநடுக்கம், கண்டுணரும் கருவி, வைணுபாப் ஆய்வகம் உள்பட 187 வகையான அறிவியல் படைப்புகளை மாணவ, மாணவியர் வைத்திருந்தனர்

Tags : Science Exhibition at School ,
× RELATED பள்ளியில் அறிவியல் கண்காட்சி