×

யோகா போட்டியில் சாதனை

தேவகோட்டை, மார்ச் 2:  கண்ணங்குடி ஊராட்சி பள்ளி மாணவர்கள் யோகோ போட்டியில் சாதனை படைத்தனர். மாநில அளவிலான யோகா போட்டிகள் கடந்த வாரம் பழநியில் நடைபெற்றது. இதில் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் மங்களம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். அனைவரும் தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள், யோகா பயிற்சி ஆசிரியர் பாலமுருகன் ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். பள்ளி தலைமையாசிரியர் சுப.கவிதா, ஆசிரியைகள் கவிதா, பொன்னழகு மஞ்சு, ஸ்ரீகலா, பாண்டிச்செல்வி, ராணி ஆகியோர் மற்றும் கிராம கல்விக்குழுவினர் பாராட்டினர்.

Tags :
× RELATED இளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்