×

க.பரமத்தி அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

க.பரமத்தி, மார்ச் 2: க.பரமத்தி அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது. க.பரமத்தி ஒன்றியம் சின்னதாராபுரம் ஜீம்மா மஸ்ஜித் பள்ளி வாசல் ஜமாத்தார்கள் சார்பில் சின்னதாராபுரம் பேருந்து நிலையத்தில் குடியுரிமை திருத்த சட்டம்(சிஏஏ, தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆர்) ஆகிய திருத்த சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சின்னதாராபுரம் ஜீம்மா மஸ்ஜித் பள்ளி வாசல் தலைமைஇமாம் நூர்முகமதுபாக்கவி தலைமை வகித்து பேசினார். பள்ளி வாசல் தலைவர் சாகுல்அமீது வரவேற்றார். இந்திய முஸ்லீம் லீக் கட்சி மாவட்ட நிர்வாகி முகமதுயுனுஸ், திமுக ஒன்றிய செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான கருணாநிதி, பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். கரூர் ஜாமியா பள்ளி வாசல் தலைமை இமாம் சையது இப்ராஹீம்ஹஸனி கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விளக்கி கூறி கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சின்னதாராபுரம் ஜீம்மா மஸ்ஜித் பள்ளி வாசல் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஜமாத்தார்கள், பல்வேறு கட்சியின் முக்கிய மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Protests ,
× RELATED போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க கோரி...