×

கரூர் நகர பகுதியில் தர்பூசணி வரத்து அதிகரிப்பு

கரூர், மார்ச் 2: கோடை காலம் துவங்க உள்ளதால் கரூர் நகரப்பகுதியில் தர்ப்பூசணி பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை நான்கு மாதங்கள் தமிழகம் முழுதும் கோடை வெயில் சுட்டெரிக்கத் துவங்கி விடும். இந்த மாதங்களில், அதிகளவு இளநீர், தர்ப்பூசணி, குளிர்பானங்கள் விற்பனையும் அதிகளவு நடைபெற்று வருவது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில், மழைக்காலம் முடிவடைந்து கோடை காலம் துவங்கவுள்ளதால், கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்ட பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள தர்ப்பூசணி பழங்கள் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், ஒரு கிலோ தர்ப்பூசணி ரூ. 15க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலம் உச்சத்தில் உள்ள நிலையில் அதிகபட்சமாக ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த இந்த தர்ப்பூசணி பழங்களை பொதுமக்களும் கோடையை சமாளிக்க ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : city ,Karur ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...