×

உலக அளவில் கனடாவில் நடைபெறும் 35 வயதுக்குட்பட்ட மூத்தோர் தடகள போட்டிக்கு குளித்தலை வீராங்கனை தகுதி

குளித்தலை, மார்ச் 2: குளித்தலை அருகே உள்ள வை.புதூரை சேர்ந்த கீதா என்ற பெண் 35 வயதுக்குட்பட்ட மூத்தோர் தடகள போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்ததுடன் உலக அளவில் கனடாவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த வை. புதூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி கீதா (40). இவரது கணவர் உடல்நலக்குறைவால் ஆறு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார். கீதா கரூர் டெக்ஸ்டைல் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சரண்குமார் என்ற மகனும், யுவ என்ற மகளும் உள்னர். சரண்குமார் கரூரில் உள்ள கல்லூரியில் பிஏ இரண்டாமாண்டு படிக்கிறார். யுவ அய்யர்மலை அரசுப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கிறார்.
கீதா 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான மூத்தோர் தடகளப் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் நடைபெற்ற கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் விளையாட்டில் பங்கேற்று பரிசு பெற்றார்.

தொடர்ந்து மாநில அளவில்திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றார். அதன்பிறகு மணிப்பூரில் 41வது தேசிய மூத்தோர் தடகளப் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்திலிருந்து 200க்கும் மேற்பட்டோர் சென்ற குழுவில் கரூர் மாவட்டம் வை.புதூர் கீதா 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசும், 400 மீட்டர் உயரம் தாண்டுதலில் 2ம் பரிசும், 2000 ஹீப்பீல் செஸ் போட்டியில் இரண்டாம் இடமும், கோலூன்றி தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். தேசிய அளவில் சாதனை படைத்த வீராங்கனை கீதா அடுத்து வரும் ஜூலை மாதம் கனடா நாட்டில் டோ ரென் ரோ இடத்தில் உலக அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வீராங்கனை கீதா கூறியதாவது: நான் பள்ளிப் பருவத்திலேயே ஓட்டப்பந்தயம், விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடி வந்தேன். எனது குடும்பத்தில் சகோதரர் சேகர், அவரது மனைவி சரளா ஆகியோர் கோலூன்றி தாண்டுதலில் பல்வேறு பரிசுகள் தேசியளவில் பெற்று உள்ளனர். இவர்கள் கொடுக்கும் ஊக்கமும், தொடர்ந்து பெற்ற பயிற்சியினாலும் நான் 35 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர் தடகளப் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளேன். எனக்கு தற்போது உலக அளவில் கனடா நாட்டில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளதால் அப்போட்டியில் கலந்து கொள்ள நிதி உதவி தேவைப்படுகிறது. அதனால் அரசாங்கம் உதவி செய்தால் போட்டியில் வெற்றி பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்து தருவேனே என கூறினார்.

Tags : seniors ,Canadian World Athletics Championships ,
× RELATED கோவை கல்லூரியில் மீண்டும் ராகிங்: 12...