×

அரசு உதவியை எதிர்பார்ப்பு அதிக வட்டி தருவதாக கூறி 3 நிதி நிறுவனங்கள் மோசடி

கரூர், மார்ச் 2: அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கரூர்- கோவை ரோட்டில் உள்ள 3 நிதி நிறுவனங்களை சேர்ந்த பெண் உள்பட 5 பேரிடம் கரூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்- கோவை ரோட்டில் 3 நிதி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கரூர், நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி டெபாசிட் பெற்றுள்ளனர். ஆனால் சொன்னபடி அதிக வட்டி தரவில்லை என கூறப்பபடுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கரூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் கடந்த 1 மாத்திற்கு முன்பே புகார் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் கரூர் குற்றப்பிரிவு போலீசார் நிதி நிறுவனங்கள் நடத்தி வரும் ஒரு பெண் உள்பட 5 பேரிடம் மேற்கொண்டு வருகின்றனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : institutions ,
× RELATED அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI...