×

தூத்துக்குடியில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி, மார்ச்2: தூத்துக்குடியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா வடக்கு மாவட்ட திமுக சார்பில் பழைய பஸ்நிலையம் அருகில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. ஸ்டாலின் வயதை குறிக்கும் விதமாக 68 கிலோ எடையிலான கேக் வெட்டப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்து கேக் வெட்டி, அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தனர். தலைமைசெயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார்ரூபன்,  மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மாவட்ட அணி செயலாளர்கள் மதியழகன், ரமேஷ், அன்பழகன், அந்தோணிஸ்டாலின், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, துணை அமைப்பாளர்கள் பாலகுருசாமி, பால்மாரி, ராமர், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தகேபிரியேல்ராஜ், துணை அமைப்பாளர் அருண், முன்னாள் விவசாய அணி நிர்வாகி மகேந்திரன், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், பகுதி துணைச்செயலாளர் பாலு, முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மாநகர மகளிரணி செயலாளர் ஜெபக்கனி, இளைஞரணி அல்பர்ட் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரத்தை கீதாஜீவன் எம்எல்ஏ அணிவித்தார். தொமுச சார்பில் தூத்துக்குடியில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

Tags : Stalin ,Birthday Celebration ,Thoothukudi ,
× RELATED ஈகைக் குணத்தின் வெளிப்பாடாகத்...