×

பைக்கை எரித்தவர் கைது

திருச்செந்தூர், மார்ச் 2: திருச்செந்தூர் அருகே குடியிருப்புவிளையைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (44). இவரும், இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சங்கர் என்பவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அதே ஊர் கோயில் தெருவைச் சேர்ந்த முத்துராஜ் (45) என்பவர், குடிபோதையில் வந்து செந்தில்வேலிடம் தான் கொடுத்த ரூ.6 ஆயிரத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் எப்போது உன்னிடம் ரூ.6 ஆயிரம் வாங்கினேன். நீ என்னிடம் கேட்கிறாயே? என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் முத்துராஜ் தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நள்ளிரவில் செந்தில்வேல் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக்கிற்கு முத்துராஜ் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீ முழுவதும் பற்றி பைக் எரிந்து நாசமானது. இதுகுறித்து திருச்செந்தூர் போலீசில் செந்தில்வேல் புகார் செய்தார். எஸ்ஐ சோனியா விசாரணை நடத்தி முத்துராஜை கைது செய்தார்.

Tags :
× RELATED பைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது