×

சாத்தான்குளம் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்

சாத்தான்குளம்,  மார்ச் 2:  சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆர்.எம். பி. புலமாடன் செட்டியார் தேசிய  மேல்நிலைப்பள்ளியில்  தமிழக அரசின்  இலவச சைக்கிள்  வழங்கும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் கிருபாகரன் தலைமை வகித்தார். பள்ளி நன்கொடையாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்ட் வரவேற்றார். சண்முகநாதன் எம்எல்ஏ கலந்து கொண்டு 174 மாணவ, மாணவிகளுக்கு  இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேவவிண்ணரசி,  முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருப்பாற்கடல், சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக செயலாளர் அச்சம்பாடு சௌந்திரபாண்டி, நகர செயலளர் செல்லத்துரை, சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஜெயராணி, முன்னாள் பேருராட்சித் தலைவர் தங்கத்தாய், முன்னாள் ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜ்மோகன், புதுக்குளம் ஊராட்சித் தலைவர் பாலமேனன், ஒன்றிய மாணவரணி செயலாளர் ஸ்டேன்லி, நடுவக்குறிச்சி முன்னாள் ஊராட்சித் தலைவர் ஆனந்தகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி உதவி தலைமை  ஆசிரியர் சாம்ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Tags : Sathankulam School ,
× RELATED சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை